KARPATHU IAS Academy Official
38.4K subscribers
1.44K photos
25 videos
1.08K files
4.39K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

+919585305822 whatsApp – voice or Text.
Happy learning and happy sharing

Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
அறிவு என்பது
எதைப் பேசுகிறோம்
என்பதில் மட்டுமல்ல...
எதை எப்போது , எப்படிப்
பேசுகிறோம் என்பதிலும்
அடங்கி இருக்கிறது..!!!

நல்லதே நினைப்போம்
*நல்லதே நடக்கும்*.
*நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்*

நாளை அதிகாரிகள் அனைவருக்கும் காலை வணக்கம்
33👍11
Letter to TNPSC
38👍25👏14
TNPSC New Where to Study 2025 P.pdf
1.6 MB
GS WTS - Tamil and English


General English Where to study
https://t.me/KarpathuIAS/9968

டிஎன்பிஎஸ்சி தமிழ் எங்கு படிப்பது
https://t.me/KarpathuIAS/9964
13👏2
வணக்கம்,

(சற்று நீண்ட பதிவு தான் வாசித்துவிடுங்கள்)

குரூப் 4 தேர்வு முடிந்து விட்டது...

"எதிர்பாராததை எதிர்பாருங்கள்" என்பதே போட்டித்தேர்வு மனநிலை எனவே தான் எதிர்பார்ப்புகளை எடுத்து வெளியே வைத்துவிட்டு திறந்த மனதுடன் தேர்வினை அணுக கேட்கிறோம்,

நடந்து முடிந்த குரூப் 4 தேர்வு கடினமான ஒன்றுதான் மறுக்க முடியாது,

இனி வரும் தேர்வுகள் இந்த மாதிரியான தரத்திற்கு சென்று கொண்டிருப்பதை கடந்த குரூப் 2/2A குரூப் 1 போன்ற தேர்வுகளின் மூலம் உணரலாம்,

இது ஒரு பக்கம் இருக்க YouTube வீடியோக்களும் அது கடமையை செய்கின்றது தமிழ்நாட்டில் நடத்திய தேர்வுகளிலே இது போன்றதொரு தேர்வினை கண்டதில்லை என்கிறது சில வீடியோக்கள்,

இந்த கருத்துகளை ஆராய்ந்து கொண்டிருக்க வேண்டாம்,

TNPSC ன் விடை வெளிவரட்டும் Challenge செய்வதற்கு உரிய வினாக்களை செய்துவிட்டு அடுத்தகட்ட நடவடிக்கைக்கு செல்லுங்கள்,

குரூப் 2/2A தான் அது ..

நீங்கள் புலம்பினாலும் போராடினாலும் படிக்கத்தான் வேண்டும் இம்முறை படிப்பினைகளை மனதில் நிறுத்துங்கள்


தேர்வர்கள் இனி என்ன செய்ய வேண்டும்..

1) யார் சொன்னாலும் சரி அடிப்படைகள் பள்ளி புத்தகங்களில் தான் உள்ளன அதில் தெளிவாகாமல் எவ்வளவு Other sources படித்தாலும் TNPSC க்கு பலன் தராது நினைவில் கொள்ளுங்கள்,

2)முற்றிலும் பள்ளி பாடபுத்தகங்கள் மட்டுமே படிப்பேன் வேறு ஏதும் படிக்க நேரமில்லை அல்லது விரும்பவில்லை என்பதும் தவறு

3) உங்களுக்கான Standard source களை நிர்ணயித்து கொண்டு அதன்படி தயாரிக்கத் தொடங்கிடுங்கள்(எது Standard source என்பதை விளக்கமாக தனியே பதிவிடுவோம்),

4) கேட்பதற்கு பழையதாக இருந்தாலும் ஒரு உண்மை சொல்லியாக வேண்டும்,சிலபஸ் மற்றும் பழைய வினாத்தாள் தான் அது (இவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தனிக்கதையாக பார்க்கலாம்),

5) Test series ன் முக்கியத்துவம் எல்லோருக்கும் தெரியும் ஆனால் எவ்வளவு பேர் நடைமுறையில் அதை கொண்டுவருகிறார்கள் என்றால் மிக அரிதானவர்களே(பயிற்சி தேர்வுகளின் இரகசியம் அரிய வேண்டுமெனில் அரசுப்பணியில் இருந்து அடுத்தகட்ட தேர்வுகளுக்கு தயாராகி வரம் நண்பர்களிடம் கேட்டுபாருங்கள் )

எத்தனை தேர்வுகள் எந்த கடின தன்மையுடன் வந்தாலும் மேற்சொன்னவை தான் அடிப்படைகள் இவற்றில் தெளிவடையாமல் யாரை விமர்சித்தும் நேர விரயம் செய்யாதீர்கள்

இவை எல்லாம் முறையாக செய்தும் நீங்கள் வெற்றியை தவற விடுகிறீர்கள் என்றால் ஒன்று தான் காரணமாக இருக்க முடியும் அது தான்

*மனநிலை*

எப்படி படித்தாலும் TNPSC மூளை குளம்பிப்போய் தான் கேள்விகள் கேட்கும்,குறுக்கு வழியில் உள்ளே நுழைய ஆயிரம் பேர் இருக்கிறார்கள்,விடைத்தாள் கசிய வாய்ப்புள்ளது என இது போன்ற மன ஓட்டங்கள் உங்களுக்குள் இருப்பது ஒரு போட்டித்தேர்வருக்கு ஏற்புடையதல்ல, இந்த மனநிலையில் இருந்து வெளிய வந்துவிடுங்கள் உழைத்தால் பலன் உண்டு என அந்த நம்பிக்கையை மட்டும் அதிகப்படுத்திடுங்கள்...

அதுவே ஆகச்சிறந்த உண்மையும் கூட

எழுதும் தேர்வு TNPSC யோ UPSC யோ எதுவாயினும் அங்கு உழைப்பிற்கும் உண்மைக்கும் மதிப்புண்டு என ஆழமாக மனதில் கொள்ளுங்கள்

பலவீனமாக இருந்து விடாதீர்கள் Media க்களால் Influence செய்யப்படுவீர்கள்

கட்ஆப் யார் சரியாக சொல்லுவார்கள் என தேடிக்கொண்டிராமல் தேர்வு அறையிலேயே வெற்றியை இறுதி செய்யும் நிலைக்கு தயாராகுங்கள்

அது யாரோ நன்றாக படிக்கும் Topper பார்த்துக்கொள்வார் என நினைக்காதீர்கள் ...

7 முறை UPSC Preliminary தேர்வில் தோற்று கடைசி வாய்ப்பில் அகில இந்திய பணிகளை தட்டிதூக்கியவர்களின் வெற்றி சரித்திரம் விரிந்து கிடக்கிறது தேடி படித்திடுங்கள்...

சராசரி மாணவர்களின் வெற்றிக்கதைகளே போட்டித்தேர்வுகளில் அதிகம் ...

மெல்ல மெல்ல வாசிக்கத் தொடங்கிடுங்கள் விட்டதை விட பெரிதாக பிடித்தாக வேண்டும்,

   
101👍44😁2🔥1
இன்றைய
கூட்டுப் பிரார்த்தனை

மரங்கள் நடுவோம்
மண்வளம் காப்போம்

மரங்கள் நடுவோம்
மழை பெறுவோம்

மரங்கள் நடுவோம்
காற்றைக் குளிர்ச்சியாக்குவோம்

மரங்கள் நடுவோம்
பல உணவுகள் பெறுவோம்

மரங்கள் நடுவோம்
மருந்துகள் பெறுவோம்

மரங்கள் நடுவோம்
பல உயிர் காப்போம்

மரங்கள் நடுவோம் நமது உயிரை காப்போம்

எல்லா உயிர்களும்
இன்புற்று வாழ்க

வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
39👍6
Madurai protest for the candidates:

Date: 20-07-25, Sunday

Time: 11.00 am - 1.00 pm

Place: Palaganatham Ring Road (near Nataraja Theater)
68😁14🔥8