KARPATHU IAS Academy Official
38.5K subscribers
1.43K photos
25 videos
1.08K files
4.39K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

+919585305822 whatsApp – voice or Text.
Happy learning and happy sharing

Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
No pain, No gain.
No risk, No reward.
No trauma, No depth.
No honesty, No clarity.
No truth, No friendship.
No discipline, No talent.
No commitment, No love.
No investment, No wealth.
No courage, No self-esteem.
No self-reflection, No peace.
No imagination, No opportunity.
but Yes TNPSC PDF @Karpathuias Telegram
30🔥5
read full text
1
அரசு பணியில் பல துறையில் பணியாற்றி உள்ளேன். சம்பளத்தை விட கிம்பளம் (லஞ்சம்) நிறையவே பெற்று சந்தோஷமாக இருந்தேன்.
ஆண்டவன் நம்மை நல்லா வச்சிருக்கான் என்று சந்தோஷமாக கோவிலுக்கு சென்று பூஜை புனஸ்காரம் செய்து வந்தேன்.
எனக்கு ஒரே மகன். நல்லா எம்.பி.ஏ. வரை படிக்க வச்சேன்.
ஒரு கிரவுண்ட் இடம் வாங்கி கார் பார்கிங், வீடு, கார், தோட்டம் என நாங்கள் சந்தோஷமாக இருந்தோம்.
நானும் ஓய்வு பெற்றேன்.
என் மகனுக்கு திருமணம் செய்து வைத்து, சென்னையில் ரூ.80,00,000-தில் பிளாட் வாங்கி குடியேறினேன்.

மருமகளும் கர்ப்பமாக இருந்தாள்.
7-ம் மாதம் சீமந்தம் வைக்க ஏற்பாடு செஞ்சிக்கிட்டு இருந்தேன். ஒரு போன் வந்து என்னை தூக்கி போட்டது. போனில், அவர் சொன்ன விசயம்..."உங்கள் மகன் பைக் விபத்தில் அரசு மருத்துவமனையில் உள்ளார் வந்து பாருங்க..." என்று.
விழுந்தடித்து சென்று பார்த்தேன்.
என் மகன் கோமா நிலைக்கு தள்ளப்பட்டான். என் மருமகளுக்கு ஆண் பிள்ளை பிறந்தது. ஆனால் என் மகன் இரண்டு மாதத்தில் உயிர் பிரிந்து விட்டான்.

என் மருமகள் அவர்கள் வீட்டுக்கு குழந்தையுடன் சென்று விட்டாள். பின்னர் அவளுக்கு ஜீவனாம்சம் மற்றும் பேரன் வாழ்க்கை செலவு என வழக்கு தொடர்ந்து எங்கள் சொத்துக்களை எல்லாம் வாங்கி கொண்டாள்.

இப்போது எனக்கு கிடைக்கும் பென்சனை வச்சுத்தான் காலம் போகுது. சாப்பாடு செலவுகள், வீட்டுக்கு வாடகை போக முட்டி வலி, சர்க்கரை போன்ற நோய்கள் பற்றிக்கொண்டதால் மருந்து செலவு வேறு...

அப்போது தான் யோசித்தேன், 'ஏன் நம் வாழ்க்கை இப்படி ஆனது என்று...'
என் மனம் சொன்னது, 'நீ வாங்கிய லஞ்சம் தான் உன் வாழ்வை சீர்ழித்தது...' என்று.
'சரி... லஞ்சம் வாங்காமல், என்னுடன் சம காலத்தில் பணிபுரிந்த என் நண்பர் ஒருவரை தொடர்பு கொண்டேன்.'அவர் என் நிலை கண்டு மனம் சங்கடப்பட்டார்.
'சரிப்பா நீ எப்படி இருக்க..?' என கேட்டேன்.அவர் சொன்னார், "நிம்மதியாக இருக்கேன்...உண்ண உணவு, உடுக்க உடை, பேரன் பேத்தி, ஓய்வு பணத்தில் சிறியதாக ஒரு வீடு, பையன், பொண்ணு தனியார் கம்பெனி வேலை...நானும் என் மனைவியும் நிம்மதியாக இருக்கோம்.." என்று சொன்னார்.

என்னை யாரோ செருப்பால் அடித்தது போல் உணர்ந்தேன்.நானும் கோவிலுக்கு போனேன் விபூதி குங்குமம் வைத்தேன். அபிஷேகம் எல்லாம் செஞ்சேனே. எனக்கு மட்டும் ஏன் இப்படி..? உணர்ந்தேன் நாமும் கோவிலுக்கு போனது பத்துல ஒண்ணா போச்சே. நல்லா இருக்கும் போது உண்மையை உணரவில்லையே.உயிரற்ற பொருள் வாங்கி குவித்தேன். என் உயிர் உள்ளே உள்ள பொருளை இழந்தேன்.
இன்று...வாழ்க்கையை இழந்து நிற்கிறேன்.

💢அரசன் அன்று கொல்வான்.
💢தெய்வம் நின்று கொல்லும்.
💢மக்களுக்கு செய்யும் சேவையே.
💢மகேசனுக்கு செய்யும் சேவை.

@ ஓய்வு பெற்ற ஒரு அரசு அதிகாரியின் ஒப்புதல் புலம்பல் இது.

True story of a Government staff.

லஞ்சம் வாங்கும் அனைவருக்கும் நல்ல பாடம்...!!!

இந்த பதிவு சற்று எல்லோருக்கும் சென்றடைய செய்யவும். அப்படியே EB , RTO, Corporation, Taluka, Registration Office-யில் பணி புரிபவர்களை இந்த பதிவை படிக்க வைத்தால் நல்லது.

💢லஞ்சம் தவிர்! நெஞ்சம் நிமிர் !💢
111👏33🔥21👍16🤔2
*🔴 BREAKING | குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் ராஜினாமா*

உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியில் இருந்து விலகுவதாக குடியரசுத் தலைவருக்கு கடிதம்.
13👍8👏5
இன்றைய கூட்டுப் பிரார்த்தனை

நமது பாரம்பரியங்களை கடைபிடித்து வரும் அனைவருக்கும் நன்றி

அதிகாலையில் எழுகிறேன் நன்றி இறைவா

உடற்பயிற்சி செய்கிறேன் நன்றி இறைவா

சூரிய உதயத்திற்கு முன் குளிக்கிறேன் நன்றி இறைவா

இயற்கை முறையில் விளைந்த பாரம்பரிய அரிசி உண்கிறேன் நன்றி இறைவா

எட்டு மணி நேரம் உழைக்கிறேன் நன்றி இறைவா

அந்தி மாலையில் நடைப்பயிற்சி செய்கிறேன் நன்றி இறைவா

சூரிய அஸ்தமனத்துக்கு முன் இரவு உணவு உண்கிறேன் நன்றி இறைவா

இரவு 8 மணிக்கு உறங்கச் செல்கிறேன் நன்றி இறைவா

பிரபஞ்சத்திற்கு நன்றி!

எல்லா உயிர்களும்
இன்புற்று வாழ்க

வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
33👍7
Answer key challenge -உங்களுடைய பதிவு எண்ணையும் - Application numberயும் நிரந்தர OTR இல் பார்க்கலாம், எடுத்து Ans Key சேலஞ்ச் செய்யவும்
8
TNPSC OMR - Last year G4 OMR Uploaded
12
Forwarded from Group 2 -2025 FUTURE BATCH TM
அனைவருக்கும் வணக்கம் நாளை குரூப் 2 / 2a மாதிரி தேர்வு 2
பொது தமிழ் மற்றும் General English அந்தந்த மாணவர்களுக்கு Question pdf 3 PM மணி அளவில்
விளக்கத்துடன் கூடிய விடைகள் pdf 6 PM மணி அளவில் வழங்கப்படும்.
6👍1
பொது தமிழ் மற்றும் General English 200 Questions
10👍3😁1
"எல்லாருக்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வற்கே செல்வம் தகைத்து"
என்ற திருக்குறளின் மேன்மையை உணர்த்துவதாகும். எல்லோரிடமும் பணிவாக இருப்பது நல்லதுதான். என்றாலும் செல்வம் வந்த பிறகு பணிவாக இருப்பது என்பது மிகவும் உயர்வான காரியம். அதுபோல் எல்லோரும் இருக்கவும் மாட்டார்கள். அப்படி இருப்பவர்களைத்தான் செல்வம் தேடி வந்து சேரும். உலகமும் கொண்டாடி மகிழும்.

வெற்றி வந்தால் = பணிவு அவசியம்...

தோல்வி வந்தால் = பொறுமை அவசியம்...

எதிர்ப்பு வந்தால் = துணிவு அவசியம் ...

எது வந்தாலும் = நம்பிக்கை அவசியம்...!

கற்பது ஐஏஎஸ் = ஜெயம் நிச்சயம்
19👍8